பாலைவனமாதல் மற்றும் வறட்சியை எதிர்ப்பதற்கான உலக தினம் - ஜூன் 17
June 18 , 2023 778 days 352 0
பாலைவனமாவதைத் தடுப்பது மற்றும் சேதமடைந்த நிலத்தை மீட்டெடுப்பதில் இந்தத் தினம் கவனம் செலுத்துகிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நடைபெற்ற மாநாட்டின் ஒரு விளைவாக 1994 ஆம் ஆண்டில் இந்த நாள் நிறுவப்பட்டது.
இந்த நாள் 1995 ஆம் ஆண்டு முதல் முறையாக அனுசரிக்கப்பட்டது.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை எதிர்த்துப் போராடச் செய்வதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாக்கல் உடன்படிக்கை (UNCCD) உருவாக்கப்பட்டது.
2006 ஆம் ஆண்டானது, "சர்வதேசப் பாலைவனங்கள் மற்றும் பாலைவனமாக்கல் ஆண்டாக" அறிவிக்கப் பட்டது.