கிமு 2500 ஆம் ஆண்டில் சிந்து சமவெளி நாகரிகத்தில் பால் உற்பத்தி நடைமுறையில் இருந்தது என்பது முதல் முறையாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது.
இதுவே பால் உற்பத்தியைப் பற்றிய ஒரு தொன்மையான ஆதாரமாகும்.
குஜராத்தில் அமைந்துள்ள கோட்டாடா பட்லியின் தொல்பொருள் தளத்தில் கண்டெடுக்கப் பட்ட மட்பாண்டங்களின் எச்சங்களை மூலக்கூறு வேதியியல் பகுப்பாய்வின் அடிப்படையில் ஆய்வு செய்த பின்னர் இந்த முடிவுகள் கிடைத்து உள்ளன.
2020 ஆம் ஆண்டானது சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப் பட்ட 100 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கிறது.