2026 ஆம் ஆண்டிற்குள் குழந்தை திருமணத்தை 10% குறைத்து 2030 ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் அந்த நடைமுறையை ஒழிப்பதற்கு அரசாங்கம் பால் விவாஹ் முக்த் பாரத் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த முன்னெடுப்பு ஆனது 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.
இது குறிப்பாக பெண்கள் மற்றும் விளிம்பு நிலைச் சமூகங்களிடையே குழந்தை திருமணங்களை ஒழிப்பதில் கவனம் செலுத்துகிறது.
சத்தீஸ்கரில் உள்ள பலோட் மாவட்டம் நாட்டின் முதல் குழந்தை திருமணம் பதிவாகாத மாவட்டமாக மாறியது.
436 கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் 9 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக குழந்தை திருமணங்கள் எதுவும் பதிவாகவில்லை.
சத்தீஸ்கரில் உள்ள சூரஜ்பூர் மாவட்டம், 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 75 கிராமப் பஞ்சாயத்துகளை குழந்தை திருமணம் இல்லாத பஞ்சாயத்துகளாக அறிவித்தது.