TNPSC Thervupettagam

பால்னா திட்ட விரிவாக்கம்

July 29 , 2025 10 hrs 0 min 23 0
  • இந்தியா முழுவதும் குழந்தைப் பராமரிப்பு ஆதரவை வலுப்படுத்துவதற்காக வேண்டி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது பால்னா திட்டத்தை பணி புரியும் தாய்மார்களுக்கும் விரிவுபடுத்துகிறது.
  • 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதியன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டமானது,
  • பால்னா திட்டமானது சக்தி மிஷன் என்ற முதன்மைத் திட்டத்தின் சமர்த்ய எனும் உட்பிரிவின் கீழ் செயல்படுகிறது.
  • 6 மாதங்கள் முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்குப் பாதுகாப்பான, அணுகக் கூடிய மற்றும் முழுமையான பகல்நேர பராமரிப்புச் சேவைகளை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் இதனால் தாய்மார்கள் குழந்தைப் பராமரிப்புகள் குறித்த கவலைகள் இல்லாமல் பணியிடத்தில் பங்கேற்க முடியும்.
  • இந்தத் திட்டமானது பகல்நேரப் பராமரிப்பு, ஊட்டச்சத்து, நோய்த்தடுப்பு, அறிவாற்றல் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பான சூழலில் மிக வழக்கமான சுகாதாரக் கண்காணிப்பு போன்ற சேவைகளை வழங்குகிறது.
  • பால்னா திட்டம் என்பது வேலைவாய்ப்பு நிலையைப் பொருட்படுத்தாமல் அனைத்துத் தாய்மார்களுக்கும் இந்தச் சேவையை வழங்குகிறது மற்றும் அனைவருக்கும் இது கிடைக்கப் பெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்