பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவற்றின் புத்துயிர் திட்டத்திற்கும், இரண்டையும் கொள்கை அல்லது திட்ட அளவில் இணைப்பதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவை நீண்டகாலப் பத்திரங்களை ரூ.15,000 கோடி என்ற அளவிற்குத் திரட்டும்.
பத்திரங்களுக்கான இறையாண்மை உத்தரவாதம் இந்திய அரசால் வழங்கப்படும்.