TNPSC Thervupettagam

பிங்கலி வெங்கய்யாவின் 150வது பிறந்தநாள்

August 5 , 2026 3 days 45 0
  • 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 அன்று பிங்கலி வெங்கய்யாவின் 150-வது பிறந்தநாளை இந்தியா அனுசரித்தது என்பதோடுபிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
  • பிங்கலி வெங்கய்யா (1876-1963) ஒரு இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், கல்வியாளர், புவியியலாளர், எழுத்தாளர் மற்றும் இந்திய தேசியக் கொடியின் (மூவர்ணக் கொடி) ஆரம்ப வடிவத்தை வடிவமைத்தவர் ஆவார்.
  • இவர் ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பட்லபெனுமர்ரு கிராமத்தில் பிறந்தார்.
  • 1921 ஆம் ஆண்டில் விஜயவாடாவில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) கூட்டத்தொடரின் போது அவர் தனது கொடி வடிவமைப்பை மகாத்மா காந்தியிடம் சமர்ப்பித்தார்.
  • 1923-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி, நாக்பூரில் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவு கூரும் வகையில் உள்ளூர் காங்கிரஸ் தொண்டர்கள் நடத்திய ஊர்வலத்தின் போது, ​​ராட்டைச் சின்னம் பொறித்த 'சுயராஜ்யக் கொடி' ஏற்றப் பட்டது.
  • வெங்கய்யாவின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு, ராட்டைக்கு (Charkha) பதிலாக அசோகச் சக்கரத்தை மாற்றி, இந்தியாவின் தற்போதைய தேசியக் கொடி ஆனது 1947 ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • அப்போது, ​​ராட்டைச் சின்னத்திற்குப் பதிலாக அடர் நீல நிறத்திலான 24 ஆரங்களைக் கொண்ட அசோகச் சக்கரம் அதில் இடம் பெறச் செய்யப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்