சமீபத்திய ஆய்வு ஒன்று பிச்சாவரம் சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பின் மொத்த பொருளாதார மதிப்பை (TEV) ₹2,485.38 கோடியாக மதிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் கடலோரப் பாதுகாப்பு, பல்லுயிர்ப் பாதுகாப்பு, மீன் வளம், சுற்றுலா மற்றும் பருவநிலை ஒழுங்குமுறை போன்ற சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளை வழங்குகின்றன.
தாவரங்கள் மற்றும் மண்ணில் சேமிக்கப்படும் கார்பன் உட்பட அதன் நீலக் கார்பன் சொத்து மதிப்பு ₹1,612.40 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மண்ணில் உள்ள கரிம கார்பன் மட்டுமே ₹1,224.63 கோடியைக் கொண்டுள்ளது, இது அதிக அளவிலான கார்பன் சதுப்புநில படிவுகளில் நிலத்தடியில் சேமிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.
இந்த ஆய்வானது சதுப்புநிலத் தாவரங்களில் ஹெக்டேருக்கு சராசரியாக 79.449 டன் கார்பனும், மண்ணில் ஹெக்டேருக்கு 251.14 டன் கார்பனும் உள்ளதாக மதிப்பிட்டு உள்ளது.