பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகளின் சுற்றுச்சூழல் அமைப்புகளின் மதிப்பீடு
July 18 , 2026 10 days 80 0
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம் சதுப்புநிலக் காட்டின் சுற்றுச் சூழல் அமைப்பு சேவைகளின் மதிப்பு ₹2,485.38 கோடியாக மதிப்பிடப் பட்டு உள்ளது.
இந்த மதிப்பீடானது கார்பன் சேமிப்பு, மீன்வள ஆதரவு, சுற்றுலா, கடலோரப் பாதுகாப்பு, பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் உள்ளூர் வாழ்வாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
பிச்சாவரம் இந்தியாவின் மிகப்பெரிய சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும் என்பதுடன் இது ஈரநிலங்கள் குறித்த ராம்சார் மாநாட்டின் (1971) கீழ் ராம்சார் தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வானது, தாவரங்கள் மற்றும் மண்ணில் உள்ள கார்பன் உட்பட, இதன் நீல கார்பன் மதிப்பை (கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளால் சேமிக்கப்படும் கார்பன்) சுமார் ₹1,612 கோடியாக மதிப்பிட்டுள்ளது.
சதுப்புநிலங்கள் என்பவை கடலோர மற்றும் முகத்துவாரப் பகுதிகளில் காணப்படும் உப்பைத் தாங்கி வளரும் (halophytic) தாவரங்களான இவை கடலோரப் பகுதிகளை மண் அரிப்பு மற்றும் புயல்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.