பிச்சாவரம் சதுப்புநிலச் சூழலமைப்பில் உள்ள மீன்கள் மற்றும் ஓடுடைய நீர்வாழ் உயிரினங்களில் அதிக அளவில் நுண்நெகிழி மாசுபாடு இருப்பதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.
பருவமழைக் காலங்களில் நெகிழிக் கழிவுகளை இப்பகுதிக்கு அடித்து வரும் அதிகப் படியான நீர்வரத்து காரணமாக, நுண்நெகிழி அளவு சுமார் 45% என மிக அதிகமாக காணப்பட்டது.
மடவை மற்றும் கரிமீன் போன்ற மீன்களும், நீல நீச்சல் நண்டு மற்றும் சேற்று நண்டு போன்ற ஓடுடைய உயிரினங்களும் அதிக அளவிலான நுண்நெகிழிகளை உட்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
இவற்றில் சுமார் 32% துகள்கள் 1 மில்லிமீட்டருக்கும் குறைவான மிகச் சிறிய அளவிலானவை என்பதோடு இவை பெரும்பாலும் பாலிஎதிலீன், பாலிப்ரொப்பிலீன் மற்றும் PET போன்ற பொதுவான பிளாஸ்டிக்குகளால் உருவாக்கப்பட்ட நீலம் மற்றும் சிவப்பு நிற இழைகளாகும்.
சதுப்புநிலத் தாவரங்களின் வேர்கள் மற்றும் வண்டல் மண் இந்த நெகிழிகளைத் தடுத்து நிறுத்துவதால், இவை அங்கே தேங்கி உணவுச் சங்கிலிக்குள் நுழைந்து சுற்றுச்சூழல் அபாயங்களை உருவாக்குகிறது.