மத்திய இரயில்வே துறை அமைச்சகமானது இரயில்கள் மற்றும் இரயில்வே நிலையங்களில் பிச்சை எடுத்தலை குற்றமற்றதாக மாற்றுவதற்குப் பரிந்துரை செய்துள்ளது.
இது இரயில்வே சட்டம், 1989 என்ற சட்டத்தின் விதிமுறைகளின் கீழ் மேற்கூறியவற்றைக் குற்றமற்றதாக மாற்றுதல் அல்லது அபராதங்களைக் குறைத்தல் ஆகியவற்றுக்கான ஒரு நடவடிக்கையின் பகுதியாகும்.
மேலும் இது புகைப்பிடித்தலைக் கண்டவுடன் அதே இடத்தில் புகைப்பிடிப்பவர் மீது அபராதம் விதிக்க வழிவகை செய்கின்றது.