பிச்சைத் தொழில் செய்பவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் தேசிய அளவிலான முன்னடுப்பு
February 3 , 2024 552 days 362 0
இந்திய அரசானது, நாடு தழுவியக் கணக்கெடுப்பு மற்றும் மறுவாழ்வு வழங்கீடு முன்னெடுப்பிற்காக 30 நகரங்களை இலக்காக நிர்ணயித்துள்ளதோடு இது இளம் பருவத்தினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் பிச்சை எடுத்தலை ஒழிக்கச் செய்யவும் முனைகிறது.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஆனது, உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து, 2026 ஆம் ஆண்டிற்குள் பிச்சைத் தொழில் செய்பவர்கள் இல்லாத மண்டலங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முன்னெடுப்பானது, 'விளிம்புநிலை தனிநபர்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் தொழில்நிறுவனங்களுக்கான ஆதரவு' என்ற துணைத் திட்டத்தின் (SMILE) ஒரு பகுதி ஆகும்.
இது நிகழ்நேரத் தகவல் புதுப்பிப்புகளுக்கான தேசிய இணையதளம் மற்றும் கைபேசி செயலியை உள்ளடக்கியது.