மறைந்த பிஜு பட்நாயக்கிற்காக அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச் சின்னமானது புது டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் திறக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற ஸ்டாலின்கிராட் என்ற போரில் பிஜு பட்நாயக்கின் பங்கைக் கௌரவிக்கும் வகையில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப் பட்டுள்ளது.
பட்நாயக் 1936 ஆம் ஆண்டில் ராயல் இந்திய விமானப்படையில் இணைந்தார்.
அவர் மிகப்பெரும்பாலும் 'டகோட்டா' என்று பொதுவாக அழைக்கப்பட்ட டக்ளஸ் C-47 ஸ்கைட்ரெய்ன் போன்ற தளவாட விநியோக மற்றும் போக்குவரத்து விமானங்களை இயக்கினார்.
ரங்கூனில் இருந்து பிரிட்டிஷ் அதிகாரிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.
சீனாவின் சியாங் காய் ஷேக்கிற்கு உதவுவதற்காக பட்நாயக் தளவாட விநியோக விமானங்களையும் இயக்கினார்.
1997 ஆம் ஆண்டில் அவர் உயிரிழந்த போது, அவரது சவப்பெட்டியானது இந்தியா, இந்தோனேசியா (அதன் சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் உதவியிருந்தார்) மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று வெவ்வேறு நாடுகளின் தேசியக் கொடிகளால் மூடப்பட்டு இருந்தது.