இந்திய உச்சநீதிமன்றமானது இந்தியா முழுவதுமுள்ள சிறைச்சாலைகளுக்குத் தனது பிணை ஆணைகளைப் பாதுகாப்பாக டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் செய்வதற்கான ஓர் அமைப்பினைச் செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இதனால் அதிகாரிகள் சிறைக் கைதிகளை விடுவிப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட காகித முறை ஆணைகளுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதில் உதவுவதற்காக மூத்த வழக்குரைஞர் துஸ்யந்த் தவே (Dushyant Dave) அவர்கள் நீதிமன்ற உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எந்தவொரு வழக்கிலும் அது தொடர்பான தகவல், நிபுணத்துவம் (அ) நுண்ணறிவு ஆகியவற்றை வழங்குவதன் மூலம் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணையில் உதவும் வகையில் வழக்கோடு தொடர்பில்லாத ஒருவர் “நீதிமன்ற உதவியாளர்” எனப் படுகிறார்.
“நீதிமன்ற உதவியாளர்” (அமிக்கஸ் கியூரி) என்பது “நீதிமன்றத்தின் நண்பன்” என்ற பொருள் கொண்ட ஒரு லத்தீன் சொற்கூறாகும்.