பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது வரம்பு அளவு மேம்படுத்தப் பட்ட பினாகா ஏவுகணையினை வெற்றிகரமாக சோதனை செய்து உள்ளது.
இந்தச் சோதனையானது ஒடிசாவின் சந்திப்பூரிலுள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் மேற்கொள்ளப் பட்டது.
122 மி.மீ. உள்விட்டம் கொண்ட இந்த ஏவுகணைகளானது பல்குழாய் உள்ளக (மல்டிபேரல்) ஏவுகணை ஏவு வாகனத்தைப் பயன்படுத்தி ஏவப் படுகின்றன.
இந்த மேம்படுத்தப்பட்ட வடிவமானது உயர் ஆற்றல் பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகத்துடன் இணைந்து புனேவைச் சேர்ந்த போர்த் தளவாடங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தினால் தயாரிக்கப் பட்டது.
இவை நாக்பூரிலுள்ள எக்னாமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் என்ற நிறுவனத்தின் உற்பத்தி ஆதரவினைப் பெற்றுள்ளன.
இந்த மேம்படுத்தப்பட்ட ஏவுகணை அமைப்பானது 45 கி.மீ. தொலைவு வரையில் வைக்கப் பட்டுள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கக் கூடும்.