கேரளாவைச் சேர்ந்த நீளம் தாண்டும் வீரர் மற்றும் ஒலிம்பிக் வீரரான அஞ்சு பாபி ஜார்ஜ் அவர்கள் இந்தியாவில் சிறந்த தடகள வீரருக்கான பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருதினை வென்றுள்ளார்.
அஞ்சு பாபி ஜார்ஜ் அவர்கள் கேரளாவின் கோட்டயத்தில் உள்ள சங்கனாச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்டவராவார்.
இவர் பாரீஸில் 2003 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதலில் 6.70 மீட்டரைத் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்று உள்ளார்.
உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் ஒரு பதக்கத்தை வென்ற முதலாவது இந்தியத் தடகள வீரர் இவராவார்.
செஸ் சாம்பியன் கிராண்ட் மாஸ்டரான கோனேரு ஹம்பி அவர்கள் 2021 ஆம் ஆண்டிற்கான பிபிசி இந்திய விளையாட்டு வீரர் என்ற விருதினை வென்றுள்ளார்.
துப்பாக்கி சுடும் வீரரான மானு பேக்கர் அவர்கள் பிபிசியின் இந்த ஆண்டிற்கான வளர்ந்து வரும் வீரர் என்ற விருதினை வென்றுள்ளார்.
2020 ஆம் ஆண்டில் பிபிசியானது கேரளாவைச் சேர்ந்த ஒலிம்பிக் வீராங்கனையான பி.டி. உஷாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கௌரவித்தது.