புது தில்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ஸ்மிருதி மந்தனா 2025 ஆம் ஆண்டின் பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
FIDE மகளிர் உலகக் கோப்பையை வென்றதற்காக திவ்யா தேஷ்முக் ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் வீராங்கனை விருதைப் பெற்றார்.
2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றதற்காக ப்ரீத்தி பால் ஆண்டின் சிறந்த பாரா-விளையாட்டு வீராங்கனை விருதைப் பெற்றார்.
அஞ்சலி பகவத் தனது துப்பாக்கி சுடுதல் விளையாட்டு பங்கேற்பிற்காகவும், ஒலிம்பிக் இறுதிப் போட்டியை எட்டியதற்காகவும் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார்.