ஐக்கிய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த (Pew Research Centre) பியூ ரிசர்ச் சென்டிரின் ஒரு ஆய்வறிக்கையின்படி, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த (அ) ஒரு நாளைக்கு 10 டாலர்கள் முதல் 20 டாலர்கள் வரை சம்பாதிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 32 மில்லியனாக குறைந்துள்ளது.
நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை பெருந்தொற்றுக்கு முந்தைய கால மதிப்பீட்டு அளவான 99 மில்லியனிலிருந்து தற்போது 66 மில்லியனாக குறைந்துள்ளது.
ஒரு நாளைக்கு 2 டாலர்கள் அல்லது அதற்கு குறைவாக ஈட்டும் ஏழை மக்களின் எண்ணிக்கை தற்போது 75 மில்லியனாக உயர்ந்துள்ளதாக பியூ சென்டர் மதிப்பிட்டு உள்ளது.