TNPSC Thervupettagam

பிரகதி-50 முன்னெடுப்பு

October 4 , 2026 2 days 40 0
  • தூய்மை இந்தியா திட்டம்-நகர்ப்புறம் 2.0 (Swachh Bharat Mission–Urban 2.0) திட்டத்தின் கீழ் 24 மாநிலங்களில் உள்ள 50 மாதிரி நகரங்களை உருவாக்குவதற்காக பிரகதி-50 (PRAGATI-50) என்ற முன்னெடுப்பு 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று புது தில்லியில் தொடங்கப்பட்டது.
  • பிரகதி-50 என்பது முக்கிய செயல்பாட்டுக் காட்டி (KPI) அடிப்படையிலான கண்காணிப்பின் மூலம் நகர்ப்புற தூய்மை, திடக்கழிவு மேலாண்மை, பயன்படுத்தப் பட்ட நீர் மேலாண்மை, சுகாதாரம் மற்றும் குடிமக்கள் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் தலைநகரங்கள், கலாச்சார மையங்கள், புனிதத் தலங்கள், சுற்றுலா மையங்கள் மற்றும் பொருளாதார மையங்கள் ஆகியவை அடங்கும், இவை மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தூய்மையான முன்மாதிரியாகச் செயல்படுகின்றன.
  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் (MoHUA) இந்த முன்னெடுப்பைச் செயல்படுத்தும், மேலும் மத்திய அமைச்சர் தலைமையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறும்.
  • உத்தரப் பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு நகரங்கள் ஆக்ரா, அயோத்தி, லக்னோ, மதுரா-பிருந்தாவனம், பிரயாக்ராஜ் மற்றும் வாரணாசி ஆகியவையாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்