March 9 , 2026
15 hrs 0 min
49
- ஆந்திரப் பிரதேச மாநில அரசு இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தையைப் பெறும் தம்பதிகளுக்கு ₹25,000 நிதி ஊக்கத்தொகையை அறிவித்தது.
- இந்தத் திட்டம் மாநிலத்தில் மொத்த கருவுறுதல் விகிதத்தை (TFR) அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ஆந்திரப் பிரதேசத்தின் மொத்த கருவுறுதல் விகிதம் சுமார் 1.5 ஆகும் என்பதோடு இது 2.1 என்ற மாற்று கருவுறுதல் அளவை விடக் குறைவாக உள்ளது.
- இந்தத் திட்டத்தின் கீழ், இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தைக்கு பிரசவத்தின் போது தம்பதிகளுக்கு ₹25,000 வழங்கப்படும்.
- இந்தக் கொள்கை மாநிலத்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதங்கள் மற்றும் அதிகரித்து வரும் வயதான மக்கள்தொகையை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- உள்ளாட்சித் தேர்தல்களில் இரண்டு குழந்தைகள் விதிமுறை தொடர்பான விதிகளில் மாற்றங்களை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
Post Views:
49