தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட குழுவானது தேர்தல் நடைபெறுவதற்கு முந்தைய 48 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் ஊடகம் மற்றும் பிரச்சாரம் குறித்த தனது அறிக்கையைத் தலைமைத் தேர்தல் ஆணையரான சுனில் அரோராவிடம் அளித்து இருக்கின்றது.
இக்குழுவானது துணைத் தேர்தல் ஆணையரான உமேஷ் சின்ஹா தலைமையில் ஏற்படுத்தப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான சிறப்பம்சங்கள் மற்றும் தேர்தல் நடைபெறுவதற்கு முந்தைய 48 மணி நேரத்தில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் தொடர்பான மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 126-ன் சிறப்பம்சங்களை ஆய்வு செய்து, தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பது தொடர்பாக இக்குழு பணிக்கப் பட்டதாகும்.
தேர்தல் நடைபெறுவதற்கு முந்தைய 48 மணி நேரத்தில் எந்தவொருப் பிரச்சாரமும் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே வாக்காளர்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்க முடியும். இந்த காலம் ஓய்வுக் காலம் எனவும் அழைக்கப்படுகிறது.
அடுத்த கட்ட நடவடிக்கைக்காக இக்குழுவின் பரிந்துரைகள் ஆணையத்தால் விரிவாக ஆய்வு செய்யப்பட இருக்கின்றன.