ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆனது பிரஜ்ஜ்வாலா சவாலை அறிமுகப் படுத்தி உள்ளது.
இது கிராமப்புற பொருளாதாரத்தை மாற்றியமைப்பதற்கான கருத்தாக்கங்கள், தீர்வுகள் மற்றும் நடவடிக்கைகளை முன்வைப்பதனை வரவேற்கிறது.
புதுமையான தொழில்நுட்பத் தீர்வு, உள்ளார்ந்த மேம்பாடு, மதிப்புச் சங்கிலிச் சார்ந்த திட்டங்கள், மேம்படுத்தப்பட்ட பெண்கள் தொழில்முனைவு, குறைந்த செலவினம் கொண்ட தீர்வுகள், நிலைத்தன்மை, இடம் சார்ந்த வேலைவாய்ப்பு, உள்ளூர் மயமாக்கப் பட்ட மாதிரிகள் ஆகியவற்றினைச் சார்ந்த கருத்தாக்கங்கள் மற்றும் தீர்வுகளை வரவேற்கிறது.