TNPSC Thervupettagam

பிரஞ்சு - மீட்டோர் ஏவுகணைகள் விரைவாக வழங்குதல்

December 7 , 2019 2060 days 678 0
  • பத்து மீட்டோர் (Meteor) ஏவுகணைகளை விரைவாக வழங்குமாறு இந்தியா பிரான்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
  • பாகிஸ்தானின் வசம் உள்ள அமெரிக்காவைச் சேர்ந்த அம்ராம் ஏவுகணைகளிலிருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.
  • மீட்டோர் என்பது கண்ணுக்கு எட்டிய தூரத்திற்கு அப்பால், விண்ணிலிருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் அதே வகுப்பைச் சேர்ந்த ஒரு மிகச் சிறந்த ஏவுகணையாகும்.
  • இது 100 கி.மீ தூரத்தில் உள்ள எதிரி விமானங்களைத் தடுத்து அழிக்கும் திறன் கொண்டது.
  • இது தனது வரம்பிலிருந்து 60 கி.மீ.க்குள் இருக்கும் ஏவுகணைகளைத் தப்பித்துச் செல்ல விடாமல், அதனைத் தாக்கி அழிக்கின்றது. இந்த ஏவுகணையானது தற்போது பாகிஸ்தானில் சேவையில் இருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த AMRAAMஐ விட அதிகத் திறன் கொண்டது.
  • இலக்கு தப்பித்துச் செல்லாமல் இருக்கும் பகுதி என்பது இலக்கிற்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டிருந்தாலும் கூட, அந்த ஒரு இலக்கிற்கு எதிராக “அதனைத் தாக்கி அழிக்க அதிக சாத்தியம்” கொண்ட ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்