2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் 2019 ஆம் ஆண்டு மார்ச் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பிரதம மந்திரி ரோஜ்கர் புரோட்சகன் யோஜனா (PMRPY - Pradhan Mantri Rojgar Protsahan Yojana) என்ற திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலையில் இணைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களிலிருந்து 57 சதவிகிதம் நபர்கள் தொழிலாளர் சக்தியில் இணைந்துள்ளனர்.
PMRPY திட்டத்தின் கீழ், 3 ஆண்டுகளுக்கு அனைத்துத் துறைகளிலும் உள்ள அனைத்து தகுதி வாய்ந்த புதிய தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் வைப்பு நிதி மற்றும் தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றிற்கான பணியளிப்பவரின் ஒட்டுமொத்தப் பங்களிப்பினையும் (12 சதவிகிதம் அல்லது தகுந்தாற்போல்) அரசே செலுத்துகின்றது.
PMRPY ஆனது வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக பணியளிப்பவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.