TNPSC Thervupettagam

பிரதமரின் ஆராய்ச்சி இருக்கை திட்டம் 2026

June 5 , 2026 9 days 111 0
  • மத்திய கல்வி அமைச்சகத்தின் (MoE) கீழ் உள்ள உயர்கல்வித் துறையானது, பிரதமரின் ஆராய்ச்சி இருக்கை (PMRC) திட்டம் 2026 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்களைத் தொடங்கியுள்ளது.
  • PMRC என்பது முன்னணி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள், ஆய்வகங்கள் மற்றும் தொழில்நுட்பத் தொழில்களில் பணிபுரியும் இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர்களை ஈர்ப்பதற்கான ஒரு தேசிய திறமைவாய்ந்தோர் - தாயகம் திரும்புதல் திட்டமாகும்.
  • இத்திட்டம் கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள உயர்கல்வித் துறையால் செயல்படுத்தப் படுகிறது.
  • இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை வலுப்படுத்துவதற்காக உலகத் தரம் வாய்ந்த அறிவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை மீண்டும் தாயகம் அழைத்து வருவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டமானது இளம் ஆராய்ச்சி உறுப்பினர்கள், மூத்த ஆராய்ச்சி உறுப்பினர்கள் மற்றும் ஆராய்ச்சி இருக்கைகள் என மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்