தேசிய பாதுகாப்பு நிதியத்தின் கீழ் உள்ள பிரதமரின் உதவித் தொகைத் திட்டத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது.
அமைச்சரவையானது உதவித் தொகையை சிறுவர்களுக்கு 2000 ரூபாயிலிருந்து ரூ2500 ஆகவும் சிறுமிகளுக்கு 2250 ரூபாயிலிருந்து ரூ.3000 ஆகவும் உயர்த்தியுள்ளது.
பயங்கரவாத/நக்சலைட்டுகள் தாக்குதலின் போது உயிர்த் தியாகம் செய்த மாநில காவல் துறை அதிகாரிகளின் குழந்தைகளுக்கும் இந்த உதவித் தொகையின் வரம்பானது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தின் காவல் துறை அதிகாரிகளுக்கான புதிய ஒதுக்கீடு வருடத்திற்கு 500 ரூபாய் ஆக உள்ளது.
இந்த விவகாரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகமானது ஒப்புதல் வழங்கு நிறுவனமாகச செயல்படும்.
தேசிய பாதுகாப்பு நிதியம்
தேசிய பாதுகாப்பு நிதியமானது 1962 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இது தேசிய பாதுகாப்பு முயற்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு அளிக்கப்படும் தன்னார்வ நன்கொடைகளை ரொக்கமாக வசூலிப்பதையும் அதன் பயன்பாட்டைத் தீர்மானிக்கும் பணிகளையும் மேற்கொள்கிறது.
தற்போது இந்த நிதியானது ஆயுதப்படை, துணை இராணுவத்தினர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நல்வாழ்விற்காக பயன்படுத்தப்படுகின்றது.
இந்த நிதியமானது பிரதமரைத் தலைவராகவும், பாதுகாப்பு, நிதி மற்றும் உள்துறை அமைச்சர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட ஒரு நிர்வாகக் குழுவால் நிர்வகிக்கப்படுகின்றது.