TNPSC Thervupettagam

பிரதமரின் குடும்ப நலக் கண்காணிப்புச் செயலி

July 4 , 2026 3 days 65 0
  • குஜராத்தின் காந்திநகரில் 'பிரதமரின் குடும்ப நலக் கண்காணிப்புச் செயலி (PM-FCT) சோதனைத் திட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
  • இது கர்ப்பிணிப் பெண்கள், பிறந்த குழந்தைகள், சிறார்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் (18 வயது வரை) ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வைக் கண்காணிப்பதற்கான ஒரு குடும்ப-மைய டிஜிட்டல் தளமாகும்.
  • இது பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய கவனிப்பு, நோய்த்தடுப்பு, ஊட்டச்சத்து, வளர்ச்சி, பள்ளியில் சேருதல் மற்றும் வளரிளம் பருவத்தினரின் ஆரோக்கியம் ஆகியவற்றை நிகழ்நேரத்தில் கண்காணிக்க வழிவகை செய்கிறது.
  • இந்தத் தளமானது டிஜிட்டல் சுகாதாரக் கடவுச்சீட்டுகள், தகவல் பலகைகள் மற்றும் தவறவிடப்பட்ட தடுப்பூசிகள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளுக்கான தானியங்கி எச்சரிக்கைகளை உள்ளடக்கியது.
  • சேவை வழங்கலை மேம்படுத்தவும், தரவுகள் மீண்டும் மீண்டும் பதிவு செய்யப் படுவதைக் குறைக்கவும் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு, சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் கல்வித் தரவு தளங்களின் தரவுகளை இது ஒருங்கிணைக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்