பிரதமருக்கு ஆகாய மார்க்கம் ஒதுக்க பாகிஸ்தான் மறுப்பு
October 30 , 2019 2204 days 796 0
இந்தியப் பிரதமரின் விமானம் பாகிஸ்தானின் ஆகாய மார்க்கம் வழியாக சவுதி அரேபியாவிற்குச் சென்றிட பாகிஸ்தான் தனது வான்வழியைப் பயன்படுத்திட அனுமதி மறுத்ததையடுத்து இந்தியா சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனத்திடம் (International Civil Aviation Organisation) புகாரளித்து இருக்கின்றது.
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனம் தேசியத் தலைவர்களைக் கொண்டிருக்கும் விமானங்களானது அரசு விமானங்களாகக் கருதப் படுமென்றும் அவை தனது விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட மாட்டாது என்றும் அப்புகாருக்கு பதில் அளித்திருக்கின்றது.
அரசாங்கங்கள் சிகாகோ ஒப்பந்தம் எனப்படும் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து ஒப்பந்தம் என்பதின் கீழ் ஆகாய மார்க்கத்தில் ஒத்துழைப்பு நல்குகின்றன.
மேலும் அந்த ஒப்பந்தம் இராணுவமல்லாத குடிமையியல் விமானங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் எந்த ஒரு இராணுவ விமானங்களுக்கும் அது பொருந்தாது என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டு இருக்கின்றது.