இத்திட்டத்தின் ஒரு புதிய திருத்தமானது மாணவர்களின் கேட் மதிப்பெண்ணை மத்திய கல்வி நிறுவனங்களைத் தவிர மற்ற அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் கட்டாயம் ஆக்கியுள்ளது.
PMRF (Prime Minister Research Fellowship Scheme) திட்டமானது முதன்முதலில் 2018-19 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிமுகப் படுத்தப்பட்டது.
இந்த திட்டமானது உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சியின் தரத்தினை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
அதாவது, அந்த நிறுவனங்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பட்டங்களை வழங்க வேண்டும்.
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் முன்னிலையில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்கள், தேசியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவை PMRF திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற நிறுவனங்களாகும்.