பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா- ஆந்திரப் பிரதேசம்
July 21 , 2022 1222 days 609 0
ஆந்திரப் பிரதேச அரசானது பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனாவில் (PMFBY) மீண்டும் இணைவதற்கு முடிவு செய்துள்ளது.
2022 ஆம் ஆண்டின் காரீஃப் பருவத்தில் இருந்து பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தினைச் செயல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (RWBCIS) ஆகியவை ஆந்திரப் பிரதேசத்தில் 2016 ஆம் ஆண்டு காரீஃப் பருவம் முதல் 2019 ஆம் ஆண்டு காரீஃப் பருவம் வரை வெற்றிகரமாகச் செயல்படுத்தப் பட்டுள்ளன.