பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் விரிவாக்கம்
September 20 , 2023 1026 days 961 0
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தினை 2025-26 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நடவடிக்கையானது PMUY திட்டப் பயனாளிகளின் மொத்த எண்ணிக்கையை 10.35 கோடியாக உயர்த்தும்.
உஜ்வாலா 2.0 திட்டத்தின் தற்போதைய நடைமுறைகளின்படி, உஜ்வாலா பயனாளிகளுக்கு முதல் முறையாக எரிவாயு மறுநிரப்புதல் சேவை மற்றும் அடுப்பு இலவசமாக வழங்கப்படும்.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா 2016 ஆம் ஆண்டு மே 01 ஆம் தேதியன்று பல்லியாவில் (உத்தரப் பிரதேசம்) தொடங்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள சுமார் 80 மில்லியன் ஏழைக் குடும்பங்களுக்குத் தூய்மையான சமையல் எரிபொருளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த இலக்கு எட்டப்பட்டது.
பின்னர், PMUY திட்டத்தின் 2வது கட்டமானது 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப் பட்டது, ஆரம்ப கட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 10 மில்லியன் இணைப்புகள் என்ற இலக்கானது, 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் அடையப் பட்டது.
பின்னர், உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை மேலும் 6 மில்லியன் இணைப்புகளை அரசாங்கம் வழங்கியது.
தற்போது இந்தத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தைத் தொடங்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.