பிரதான் மந்திரி உர்ஜா கங்கைத் திட்டம் என்பது வாரணாசியில் இருக்கும் குடியிருப்புவாசிகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயுவை அளிப்பதை நோக்கமாகக் கொண்ட எரிவாயுக் குழாய்த் தொடர் திட்டமாகும்.
இதன் பின்பு இத்திட்டம் பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
உர்ஜா கங்கைத் திட்டத்தைச் செயல்படுத்தும் கெயில் நிறுவனத்தின் படி, ஏறத்தாழ 20 இலட்சம் குடும்பத்தினர் குழாய் மூலமான எரிவாயு இணைப்புகளைப் பெறவிருக்கின்றனர்.