TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா - மூன்றாவது கட்டம்

December 21 , 2019 1958 days 859 0
  • மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர் பிரதான் மந்திரி கிராம சதக் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • இந்த திட்டத்தின் மூன்றாம் கட்டமானது 1,25,000 கி.மீ. தொலைவுள்ள சாலை இணைப்புகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது கிராம வேளாண் சந்தைகளை இணைக்கும் கிராமப்புற சாலை இணைப்புகளை ஏற்படுத்துவதை முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா பற்றி

  • இந்தத் திட்டமானது 2000 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • 2015 ஆம் ஆண்டில், 14வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் கீழ், இந்தத் திட்டமானது மத்திய மற்றும் மாநில அரசுகளினால் 60:40 என்ற விகிதத்தில் நிதியளிக்கப் படுகின்றது.
  • வடகிழக்கு மாநிலங்களில் இந்த நிதியுதவி விகிதமானது 90:10 (மத்திய அரசு : மாநில அரசு) என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
  • சாலைகளின் பெரும்பகுதியை உருவாக்குவதற்கு இந்தத் திட்டமானது நெகிழிக் கழிவு மற்றும் வெப்பப் படுத்தப்படாத கலவை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்