TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்சார்த்த அபியான் திட்டம்

August 10 , 2021 1466 days 739 0
  • இத்திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 02 வரையில் ஏறக்குறைய 5 கோடி பயனாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 4 கோடி பேருக்குப் பயிற்சி வழங்கப் பட்டுள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.
  • இந்தத் திட்டமானது மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள கிராமப் புறப் பகுதிகளில் வசிக்கும் 6 கோடி நபர்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவை வழங்கச் செய்வதற்காக வேண்டி தொடங்கப்பட்டதாகும்.
  • டிஜிட்டல் ரீதியாக நிலவும் இடைவெளியை நிரப்புவதையும் குறிப்பாக கிராமப்புற மக்களை இலக்காக வைத்து டிஜிட்டல் கல்வியைப் புகுத்துவதனையும் நோக்கமாகக் கொண்டு இத்திட்டமானது தொடங்கப்பட்டது.
  • இத்திட்டத்தில் பட்டியலினச் சாதியினர், பட்டியலினப் பழங்குடியினர், சிறுபான்மை மக்கள்ர், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் போன்ற சமுதாயத்தின் விளிம்புநிலைப் பிரிவினரும் உள்ளடங்குவர்.
  • இத்திட்டமானது டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்த திட்டமானது இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
  • குடும்பத்தில் ஓர் உறுப்பினர் கூட டிஜிட்டல் கல்வியறிவினைப் பெறாத அனைத்துக் குடும்பங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி பெறுகின்றன.
  • இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய குடும்பத்திலிருந்து 14 முதல் 60 வயதிற்குட்பட்ட ஒரு நபருக்கு மட்டும் பயிற்சி வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்