- பொருளாதார விவகாரங்கள் மீதான அமைச்சரவைக் குழுவானது, பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது கட்ட அமலாக்கத்தினை 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை தொடர்வதற்கும், இடதுசாரி தீவிரவாத அமைப்புகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான சாலை இணைப்புத் திட்டத்தினை 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தொடர்வதற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த மூன்று திட்டங்களின் கீழ் திட்டமிடப்பட்ட பணிகள் முடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த காலக் கெடுவானது நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடரப்பட வேண்டியதன் அவசியம்
- கோவிட் பொது முடக்கம், நீண்டநாட்களாக பெய்து வரும் மழை, குளிர்காலம், வனம் சார்ந்த பிரச்சனைகள் போன்ற காரணங்களால், வடகிழக்கு மற்றும் மலைப் பகுதியிலுள்ள மாநிலங்களில் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது கட்டங்களின் கீழ் பெரும்பாலான பணிகள் நிலுவையில் உள்ளன.
- மேலும், கிராமப்புற பொருளாதாரம் தொடர்பான இந்த முக்கியமானப் பணிகளை முடிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு பல மாநிலங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன.
- சாலை இணைப்புப் பெறாத குடியிருப்புப் பகுதிகளுக்கு, அனைத்து வானிலைகளிலும் பயணிக்கும் வகையிலான சாலைகளை அமைப்பதன் மூலம் போக்குவரத்து வசதிகளை வழங்குவதே இதன் நோக்கம் ஆகும்.
