பிரதான் மந்திரி கிஷான் திட்டத்திற்காக இந்திய அஞ்சல் துறையுடன் இணைதல்
October 15 , 2020 1774 days 702 0
கோவா மாநில அரசானது பிரதான் மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தில் (PM – KISAN - Pradhan Mantri Kisan Samman Nidhi scheme) பதிவு செய்துள்ள 11,000 விவசாயிகளுக்காக வேண்டி இந்திய அஞ்சல் துறையுடன் இணைய இருக்கின்றது.
PM – KISAN திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்காக இந்தியாவில் இது போன்ற ஒரு நடவடிக்கை தொடங்கப் படுவது இதுவே முதன்முறையாகும். இதில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக தபால்காரர் பயன்படுத்தப்பட உள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் மூன்று தவணைகளில் ரூ.2000 என்ற தொகையை நேரடிப் பயன்பாடு பரிமாற்ற முறையில் விவசாயிகளுக்கு அளிக்கும் இந்தத் திட்டமானது பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள விவசாயிகள் நலனுக்கானது ஆகும்.