TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி சுவஸ்திய சுரக்சா நிதி

March 12 , 2021 1613 days 656 0
  • மத்திய அமைச்சரவையானது பிரதான் மந்திரி சுவஸ்திய சுரக்சா என்ற நிதியை ஒரே காலாவதியாகாத ஒரு ஒதுக்கப்பட்ட நிதியாகப் பயன்படுத்தப் படுவதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.
  • இதன் முக்கியப் பயன்பாடுகள் தற்பொழுது  இருக்கின்ற வளங்களின் மூலம் நாடு தழுவிய மற்றும் குறைந்த விலையில் சுகாதார நலத்தை அணுகுவதை மேம்படுத்தச் செய்வதோடு, இந்தத் தொகையை அந்த நிதியாண்டின் முடிவில் காலாவதியாகாமல் இருப்பதை உறுதி செய்வது ஆகியனவாகும்.
  • இந்த நிதியானது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தினால் நிர்வகிக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றது.
  • இந்த நிதியின் மூலம் கிடைக்கும் வருமானமானது சுகாதாரத் துறை அமைச்சகத்தின் பின்வரும் முதன்மைத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்பட இருக்கின்றது.
    • தேசிய சுகாதாரத் திட்டம்
    • ஆயுஷ்மான் பாரத் – சுகாதார மற்றும் நல மையங்கள்
    • ஆயுஷ்மான் பாரத் – பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா
  • மேலும் இந்த நிதியானது சுகாதார அவசர நிலைகளின் போது அவசர கால & பேரிடர் காலத் தயார்நிலை மற்றும் மீட்பு ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது.
  • மேலும் இது நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை நோக்கியச் செயல்பாடுகளை அடைதல் மற்றும் தேசிய சுகாதாரக் கொள்கை – 2017 என்பதின் இலக்குகளை அடைதல் ஆகியவற்றையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்