மத்திய அரசானது தெரு உணவு விற்பனையாளர்களை ஆன்லைன் மார்க்கத்தில் கொண்டு செல்ல வேண்டி சுவிகியுடன் (Swiggy) இணைந்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கையானது தெருவோர விற்பனையாளர்கள் ஆயிரக்கணக்கான நுகர்வோர்களை அணுகுவதற்கு உதவ இருக்கின்றது. இது அவர்களின் வர்த்தகத்தை வளர்ச்சியடையச் செய்யும்.
இதன் தொடக்க முயற்சியின் ஒரு பகுதியாக, இது அகமதாபாத், சென்னை, தில்லி, இந்தூர், வாரணாசி ஆகிய 5 நகரங்கள் முழுவதும் 250 விற்பனையாளர்களைக் கொண்டு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது.