TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி சூர்ய சரோவர் யோஜனா

August 3 , 2026 19 days 99 0
  • ஆற்றல் சேமிப்பு அமைப்புகளுடன் கூடிய மிதக்கும் சூரிய ஒளி மின்னழுத்த (FSPV) திட்டங்களை உருவாக்குவதற்கான பிரதான் மந்திரி சூர்ய சரோவர் யோஜனா (PM-SSY) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது ₹5,070 கோடி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட ஒரு மத்திய துறைத் திட்டமாகும், என்பதுடன் மேலும் 2030-31 ஆம் ஆண்டிற்குள் 5,000 மெகாவாட் (MW) மிதக்கும் சூரிய ஒளி மின் திறனை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டம் நீர்த்தேக்கங்கள் மற்றும் உள்நாட்டு நீர்நிலைகளில் சூரிய ஒளித் திட்டங்களை ஆதரிக்கிறது மற்றும் திட்டம் தொடங்கப்பட்ட பிறகு மெகாவாட்டிற்கு ₹1 கோடி மத்திய நிதி உதவியை (CFA) வழங்குகிறது.
  • மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்வதற்காகக் குறைந்தபட்சம் இரண்டு மணிநேர (10,000 மெகாவாட்-மணிநேரம் - MWh) சேமிப்புத் திறன் கொண்ட ஆற்றல் சேமிப்பு அமைப்புகளையும் (ESS) இது உள்ளடக்கியுள்ளது.
  • இத்திட்டத்தை இந்திய சூரிய ஆற்றல் நிறுவனம் (SECI) செயல்படுத்தும் மற்றும் இது சுமார் ₹28,500 கோடி முதலீட்டை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்