பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் செயலாக்க மாதிரிகள்
February 6 , 2019 2315 days 690 0
பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியத் திட்டமானது அத்திட்டத்தை மாநிலங்கள் நிறைவேற்றிடுவதற்காக பின்வரும் மூன்று மாதிரிகளை முன்மொழிந்து இருக்கின்றது.
காப்பீட்டு மாதிரி
இம்மாதிரியின் கீழ் காப்பீட்டுத் தொகை காப்பீட்டு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டு அந்நிறுவனங்கள் அத்தொகையை நிர்வகித்து உரிமை கோருபவர்களுக்கு பணம் செலுத்துகின்றது.
அறக்கட்டளை மாதிரி
இம்மாதிரியின் கீழ் ஒவ்வொரு மாநிலமும் இத்திட்டத்தை செயல்படுத்திட தனக்குச் சொந்தமான ஒரு அறக்கட்டளையை நிறுவும். உரிமைக் கோரல்கள் மத்திய மாநில அரசுகள் பங்களித்த தொகுப்பு நிதியிலிருந்து விநியோகிக்கப்படும்.
கலப்பின மாதிரி
இம்மாதிரியின் கீழ், உரிமை கோரல்களின் ஒரு பகுதி காப்பீட்டு மாதிரியின் கீழும், மற்றொரு பகுதி அறக்கட்டளையின் கீழும் செயல்படுத்தப்படும்.