பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால புரஸ்கர் விருது 2021
January 30 , 2021 1748 days 859 0
இது 21 மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசங்களின் 32 மாவட்டங்களைச் சேர்ந்த 32 குழந்தைகளுக்கு வழங்கப் பட்டுள்ளது.
புத்தாக்கம், கல்வி, விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம், சமூகச் சேவை மற்றும் துணிச்சல் ஆகிய துறைகளில் தனித்துவமான திறன்களும் சிறப்பான சாதனைகளும் பெற்ற குழந்தைகளுக்கு இந்திய அரசால் இது வழங்கப்படுகிறது.
இந்த விருது முன்னர் தனித்துவமான சாதனைக்கான தேசிய குழந்தை விருது என்று அழைக்கப் பட்டது.
இது 18 வயதிற்கு உட்பட்ட தனித்துவமான சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் இந்தியாவின் மிக உயரிய விருதாகும்.
பெண் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இந்த விருதுகளை 1996 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தியது.