TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி ராஷ்டிரீய பால் புரஸ்கார் 2019

January 16 , 2019 2393 days 788 0
  • குழந்தைகளுக்கான தேசிய விருதுகள் என்பது பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் என சீரமைக்கப்பட இருக்கின்றது. இது சாகச விருதுகள் பிரிவையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
  • கடந்த ஆண்டு வரையில் தேசிய சாகச விருதுகள் பிரிவு "குழந்தைகள் நலனிற்கான இந்தியக் குழுமம்" என்ற அரசு சாரா அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டன.
  • 2019 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் என்ற விருதிற்காக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் 26 நபர்களை வரிசைப்படுத்தியுள்ளது.
  • இந்த விருதுகள் குடியரசுத் தினத்தோடுத் தொடர்புடைய ஒரு நிகழ்ச்சியில் ஜனவரி 22-ம் தேதியன்று இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கப்படும்.
  • சாகசப் பிரிவைத் தவிர இதரப் பிரிவுகளில் உள்ள குழந்தைகளுக்கு முன்னர் குழந்தைகள் தினத்தன்று தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்