TNPSC Thervupettagam

பிரதான்மந்திரி சங்க்ரஹாலயா

April 16 , 2022 1223 days 506 0
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் டெல்லியில் பிரதான் மந்திரி சங்க்ரஹாலயா எனும் அருங்காட்சியகத்தினைத் திறந்து வைத்தார்.
  • புகழ்பெற்ற தீன் மூர்த்தி வளாகத்தில் அமைந்துள்ள சங்கரஹாலயா, சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவின் (ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்) ஒரு பகுதியாக திறக்கப் பட்டது.
  • இந்த அருங்காட்சியகம் ஜவஹர்லால் நேரு முதல் மன்மோகன்சிங் வரையிலான 14 பிரதமர்களின் பதவிக் காலத்தினை ஞாபகப் படுத்துகிறது.
  • இது சுதந்திரம் வாங்கியதில் இருந்து இந்தியாவின் அனைத்துப் பிரதமர்களுக்கான ஒரு நினைவிடமாக இருக்கும்
  • இந்த அருங்காட்சியகமானது, ஒவ்வொரு பிரதமரும் எதிர்கொண்ட துன்பங்களையும், அவற்றைச் சமாளித்து புதிய இந்தியாவிற்கான அடித்தளத்தை அமைப்பதில் அவர்கள் எவ்வாறு வெற்றியடைந்தார்கள் என்பதையும் இளைஞர்கள் அறிய வழிவகை செய்யும் வகையில் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஒரு மூல ஆதாரமாகத் திகழும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்