பிரபாஸ் படான் கல்வெட்டுகள் மற்றும் சோம்நாத் கோயில்
January 19 , 2026 3 days 49 0
பிரபாஸ் படான் குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் அரேபிய கடலுக்கு அருகில் அமைந்துள்ளது.
பிரபாஸ் படான், சோம்நாத் கோயிலின் வரலாற்றுடன் தொடர்புடைய கல்வெட்டுகள், செப்புத் தகடுகள் மற்றும் நினைவுக் கற்களைக் கொண்டுள்ளது.
இந்தக் கல்வெட்டுப் பதிவுகள் சோம்நாத்தின் நீண்ட கால சமய முக்கியத்துவத்தையும், இப்பகுதியில் நிலவிய அரச ஆதரவையும் காட்டுகின்றன.
கி.பி. 1169 என்ற தேதியிட்ட பத்ரகாளி கல்வெட்டு, சோலங்கி மன்னர் குமாரபாலரின் ஆட்சிக் காலத்தில் சோம்நாத் கோயிலின் கட்டுமானம் குறித்த தகவல்களை கொண்டு உள்ளது.
சத்யா, திரேதா, துவாபரா மற்றும் கலி ஆகிய நான்கு யுகங்களிலும் சோம்நாத் மகாதேவ் கோயில் மீண்டும் கட்டப்பட்டதாக இந்தக் கல்வெட்டு கூறுகிறது.
இந்தக் கல்வெட்டுகளுடன் தொடர்புடைய கலைப் பொருட்கள் சூரிய கோயில் வளாகத்திற்கு அருகிலுள்ள பிரபாஸ் படான் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப் பட்டு உள்ளன.