TNPSC Thervupettagam

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு மீளமைப்பு

September 27 , 2019 2137 days 832 0
  • இந்தியப் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவை (Economic Advisory Council to the Prime Minister - PMEAC) மத்திய அரசு திருத்தியமைத்துள்ளது.
  • இது 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அடுத்த இரண்டு ஆண்டு காலத்திற்கு செயல்பட இருக்கின்றது.
  • திருத்தியமைக்கப்பட்ட PMEACன் தலைவராக டாக்டர் பிபெக் தெப்ராயும் உறுப்பினர் செயலாளராக ரத்தன் பி வாட்டலும் தொடர்ந்து நீடிப்பர்.
  • இக்குழுவில் உள்ள 2 பகுதி நேர உறுப்பினர்களான ரத்தின் ராய் மற்றும் ஷாமிகா ரவி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
இதுபற்றி
  • PMEAC என்பது இந்திய அரசிற்கு அதிலும் குறிப்பாக இந்தியப் பிரதமருக்கு பொருளாதார ஆலோசனைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட அரசியலமைப்புச் சாராத நிரந்தரமற்ற ஒரு தனிச் சுதந்திர அமைப்பாகும்.
  • PMEAC ஆனது ஒரு தலைவரால் தலைமை தாங்கப்படுகின்றது. இது புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.
  • PMEACன் உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கை குறித்து எந்தவொரு வரையறையும் வரையறுக்கப் படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்