பிரம்மோஸ் அடுத்த தலைமுறை நுட்பத்திலான சீர்வேக எறிகணை
February 18 , 2025 217 days 182 0
இந்தியாவின் பிரம்மோஸ் NG (அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்திலான) எறிகணை அமைப்பின் உருவாக்கமானது நிறைவு நிலையை எட்டும் நிலைகளில் உள்ளது.
பிரம்மோஸ் NG ஆனது அதன் முன்னோடி வடிவினைப் போலவே அதே திறன்களைக் கொண்ட ஒரு மெல்லிய வடிவிலான எறிகணையாகும்.
பிரம்மோஸ் NG இலகுவானது, சிறியது மற்றும் அடக்கமானது என்பதால் ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட சுகோய்-30MKI ரக போர் விமானம் மற்றும் இங்கு உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்ட தேஜாஸ் எனும் இலகுரகப் போர் விமானம் ஆகியவற்றில் பொருத்தப் படுவதற்கு இணக்கமாக இருக்கும்.
இந்த எறிகணை ஆனது 290 கி.மீ தூரம் மற்றும் 3.5 மேக் வரை வேகம் கொண்டது.
பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு அடுத்தபடியாக, இந்த எறிகணை அமைப்புகளை வாங்கும் இரண்டாவது நாடாக இந்தோனேசியா மாற உள்ளது.