பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம்
January 4 , 2022
1236 days
625
- இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள், அரசுகளுக்கு இடையேயான பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தத்தினை அலுவல்முறையில் தொடங்க உள்ளன.
- இந்தோனேசியா உள்ளிட்ட சில நாடுகளும் மற்றும் சில வளைகுடா நாடுகளும் இந்த ஏவுகணைகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டியுள்ளன.
- பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்பது ஒரு இந்திய – ரஷ்யக் கூட்டு நிறுவனமாகும்.
- இது நீழ்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள் அல்லது நிலப்பரப்பிலிருந்து ஏவக்கூடிய மீயொலி சீர்வேக ஏவுகணைகளை உற்பத்தி செய்கிறது.
- உலகிலேயே 2.8 மேக் வேகத்தில் அல்லது ஒலியின் வேகத்தை விட கிட்டத்தட்ட 3 மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ஒரே மீயொலி சீர்வேக ஏவுகணை இதுவேயாகும்.
- ஏற்றுமதி செய்யப்படும் இந்த வகை ஏவுகணையின் மாற்றுருவானது சுமார் 290 கி.மீ. வரம்புடையதாக இருக்கும்.

Post Views:
625