இந்தியக் கடற்படையின் ஒரு போர்க் கப்பலான INS விசாகப் பட்டினம் என்ற ஒரு கப்பலிலிருந்து, மேற்கத்தியக் கடற்பகுதியில் பிரம்மோஸ் மீயொலி சீர்வேக ஏவுகணையின் கடல்பரப்பிற்கு ஏற்ற வடிமானது சோதனை செய்யப்பட்டது.
INS விசாகப்பட்டினம் என்றக் கப்பலானது, இந்தியக் கடற்படையின் புதிய மற்றும் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட ரேடார் கருவிக்குப் புலப்படாத தொழில்நுட்பம் கொண்ட ஒரு ஏவுகணை அழிப்புக் கப்பலாகும்.
பிரம்மோஸ் என்பது இந்தியக் கடற்படையின் போர்க் கப்பல்களின் முக்கிய ஆயுத அமைப்பாகும்.