ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் ஆனது ஒரு வார காலக் கலாச்சார விழாவான மூன்றாவது பிரவாசி பரிசாய் விழாவினைத் தொடங்கியுள்ளது.
இந்த விழா முதன்முதலில் 2023 ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவில் உள்ள இந்தியப் புலம்பெயர்ந்தோர் சங்கங்களுடன் இணைந்து நிறுவப்பட்டது.
பிரவாசி பரிசாய் நிகழ்வில் இந்தியப் பாரம்பரிய நடனம், இசை, நாட்டுப்புறக் கலை மற்றும் சமையல் மரபுகளைக் காண்பிக்கும் மாநில அளவிலான கருப்பொருள் சார்ந்த விழாக்கள் அடங்கும்.
இந்த விழா அக்டோபர் 31 ஆம் தேதியன்று வரும், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற விழுமியங்களை எடுத்துக் காட்டுகின்ற தேசிய ஒற்றுமை தினத்துடன் ஒருங்கே அமைகிறது.