பிரவாசி பாரதிய சம்மன் விருதுகள் 2019
January 26 , 2019
2382 days
808
- குடியரசுத் தலைவர் 2019 ஆம் ஆண்டிற்கான பிரவாசி பாரதிய சம்மன் விருதுகளை 30 பேருக்கு வழங்கினார்.
- இந்த விருதுகளானது வாரணாசியில் நடைபெற்ற பிரவாசி பாரதிய சம்மன் நிகழ்வில் வழங்கப்பட்டன.
- இந்த விருதானது வெளிநாட்டு இந்தியர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும்.
- இந்த மதிப்புமிக்க விருதுகளை,
- கீதா கோபிநாத் – IMF-ன் தலைமை பொருளாதார நிபுணர்.
- சந்திர சேகர் மிஸ்ரா – மூத்த அறிவியலாளர் (2015 ஆம் ஆண்டு இந்திய அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உறவிற்கு கருவியாக செயல்பட்டவர்)
- கிரிஷ் பந்த் – ஐக்கிய அரசு அமீரகத்தில் நீரில் மூழ்கிய பல இந்திய கடல் மாலுமிகளை மீட்பதில் கருவியாக செயல்பட்ட சமூக நலப்பணியாளர்)
ஆகியோர் பெற்றுள்ளனர்.
- 2003 லிருந்து 2015 வரை ஒவ்வொரு ஆண்டும் பிரவாசி பாரதிய சம்மன் மாநாட்டில் 15 விருதுகள் வழங்கப்பட்டன.
- 2015லிருந்து இந்த மாநாடானது ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. மேலும் விருதுகளின் எண்ணிக்கை 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Post Views:
808