TNPSC Thervupettagam

பிரவுன் டிரவுட் மறு அறிமுகம்

September 18 , 2025 16 days 69 0
  • பிரவுன் டிரவுட் இனமானது முதன்முதலில் 1900 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் விளையாட்டு சார்ந்த மீன்பிடித்தலுக்காக காஷ்மீரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • காஷ்மீரின் டச்சிகாமில் உள்ள பஞ்சகம் ஓடையில் அறிமுகப்படுத்தப்பட்ட 1,800 டிரவுட் மீன் குஞ்சுகள் ஆரம்ப கட்ட வெற்றிகரமான அறிமுகத்தில் அடங்கும்.
  • கட்டுப்பாடற்ற மீன்பிடித்தல் பல தசாப்தங்களாக பிரவுன் டிரவுட் மீன்களின் எண்ணிக்கையில் நிலையான சரிவை ஏற்படுத்தியது.
  • மீன் வளத்துறையானது தற்போது பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) திட்டத்தின் கீழ் பிரவுன் டிரவுட் மீன்களின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரித்து வருகிறது.
  • அவற்றின் தன்னின உண்ணி சாராத இனப்பெருக்க காலத்தில் அதாவது அக்டோபர் மாதத்தில் ஓடைகளில் அறிமுகப்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
  • ஆற்றுப் படுகை ஆனது வாழ்விடத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தாலும் இந்த மறு அறிமுகமானது விளையாட்டு சார்ந்த மீன்பிடித்தல் மற்றும் சுற்றுச்சூழல் சார் சுற்றுலாவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்